அறுகம்பை தேசிய, பகிரங்க அலைச்சறுக்கு போட்டி; லக்‌ஷித்த மதுசான் தேசிய சம்பியனாக தெரிவு | தினகரன்

அறுகம்பை தேசிய, பகிரங்க அலைச்சறுக்கு போட்டி; லக்‌ஷித்த மதுசான் தேசிய சம்பியனாக தெரிவு

பகிரங்க ஆண்கள் போட்டியில் அசங்கவும் பெண்கள் போட்டியில் நிக்கிட்டா ரொப்

அறுகம்பை கடற்கரை பிரதேசத்தில் தேசிய மற்றும் பகிரங்க அலைச்சறுக்கு விளையாட்டு  போட்டியில் தேசிய சம்பியனாக வெலிகம விளையாட்டுக்கழகத்தின் லக்‌ஷித்த மதுசான் தெரிவானார். இவர் 3ஆயிரம் புள்ளிகள் பெற்றே முதலிடத்தை தட்டிச் சென்றார். இரண்டாமிடத்தை அறுகம்பை விளையாட்டுக்கழகத்தை செர்ந்த லசித்த பிரபாத் பெற்றுக் கொண்டார்.மூன்றாமிடத்தை பிரனீத் சந்தருவன் பெற்றார்.பகிரங்க ஆண்களுக்கான போட்டியில் முதலிடத்தை இலங்கையின் அசங்க சஞ்சீவ பெற்றார்.இரண்டாமிடத்தை இஸ்ரேலைச் சேர்ந்த பார் பெற்றார்.மூன்றாமிடத்தை அவுஸ்திரேலியாவின் லியான் முராட் பெற்றார்.அத்துடன் பெண்களுக்கான போட்டியில்

முதலிடத்தை தென்னாபிரிக்காவின் நிக்கிட்டா ரொப் பெற்றார்.இரண்டாமிடத்தை குருட் லெசன் பெற்றார்.மூன்றாமிடத்தை இலங்கையின் சுனேரா ஜயமான்ன  பெற்றார்.

இதேவேளை தேசிய போட்டியில் சம்பியானாக லக்சித்த மதுசான் பெற்ற அதே நேரம் இரண்டாமிடத்தை சங்க சஞ்சீவவும் மூன்றாமிடத்தை லசித்த பிரபாத்தும் பெற்றனர்.

இலங்கை அலைச்சறுக்கு சங்கம் மற்றும் லங்கா ஸ்போர்ட்ஸ் ரைசிங் (எல். எஸ். ஆர்) நிறுவனமும் இணைந்து 26ம் திகத சனிக்கிழமையும் 27ம்திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமையும் அறுகம்பை கடற்கரை பிரதேசத்தில் தேசிய மற்றும் பகிரங்க அலைச்சறுக்கு விளையாட்டு (சேர்பிங்) தொடரொன்றை நடாத்தியது.இலங்கை,அவுஸ்திரேலியா,இஸ்ரேல்,ஆர்ஜன்டினா,ஜேர்மன்,ரஷ்யா,ஸ்பெகிஸ்தான்,தென்னாபிரிக்கா,போலாந்து,இங்கிலாந்து,அமெரிக்கா,இத்தாலி,பெல்ஜியம்.பிரான்ஸ்,எஸ்தோனியா,ஸ்பெயின் ஆகிய நாட்டு வீரர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.இந்த வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் கொரோனா காலப்பகுதியில் இலங்கை வந்து தங்களது நாடுகளுக்கு செல்ல முடியாமல் சுமார் 6மாதங்கள்   தங்கியுள்ளவர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.

15நாடுகளில் இருந்து 101போட்டியாளர்கள் பங்கேற்றனர். தேசிய போட்டிகளில் 67ஆண்களும் திறந்த சர்வதேச போட்டிகளில் 32ஆண்களும், அத்துடன் திறந்த சர்வதேச போட்டியில் 14பெண்  போட்டியாளர்கள் பங்கேற்றமை விசேட அம்சமாகும்.அறுகம்பையில் இடம்பெற்ற இந்த அலைச்சறுக்கு போட்டி சுகாதார நடைமுறையை பின்பற்றி இடம்பெற்றது.இப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொள்ள வில்லை.

இச்சுற்றுப் போட்டிக்கு முதற் தடைவையாக மொபிடெல் நிறுவனம் அனுசரணை வழங்கியது.மொபிடெல் நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் -(சந்தைப்படுத்தல்) ரவீன் விக்கிரமரத்ன,அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவின் இணைப்புச் செயலாளர் ஜானக்கவருன சிங்க, மொபிடெல் நிறுவன அதிகாரி பெரேரா, ஸ்போர்ட் ரைசிங் நிறுவனத் தலைவர் திலக் வீரசிங்க,அலைச்சறுக்கு விளையாட்டு சங்கத்தின் தலைவர் ஹிரான் உக்வத்த ஆகியோர்  வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் விருதுகளை வழங்கினர்.

இங்கு கருத்து தெரிவித்த ரவின் விக்ரமரத்தன கொரோனா ஏற்பட்டதன் பின்னர் விளையாட்டு துறையில் தொய்வு நிலைகாணப்பட்டது.அதனை கருத்தில் கொண்டு தேசிய நிறுவனம் என்ற ரீதியில் நாங்கள் இந்த போட்டியை நடத்த அனுசரணை வழங்க முன்வந்தோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.இலங்கையில் தற்போது விளையாட்டுத்துறை அச்சம் நீங்கி முன்னேற்ற பாதைக்கு செல்வதைக்காணக்கூடியதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

கொவிட் 19தொற்றின் பின் விளையாட்டுத்துறையை முன்னேற்றுவதற்காகவும், கிழக்கு மாகாண உல்லாசத் துறையை வளர்ச்சியடைச் செய்வதற்காகவும்  27ம் திகதி  உலக உல்லாச தினம் என்பதால் அத்தினத்தை முன்னிட்டு உல்லாச அமைச்சுடன் இணைந்து இத்தொடர் இடம்பெற்றது.

கொரோனா தொற்றின் பின் ஏனைய சர்வதேச நாடுகளைப் போல் இலங்கையிலும் விளையாடுத்துறை பின்னடவை சந்தித்திருந்தாலும் சில நாடுகளில் தற்போது மெல்ல மெல்ல சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகிறது. சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இலங்கையிலும் சர்வதேச போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுடன் கூடிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது எப்படி? விளையாட்டுடன் இணைந்த உல்லாசப் பயணத்துறையை முன்னேற்றுவது எப்படி? கிழக்கு, வடக்கு கடற்கரையாகட்டும், பதுளை, நுவரெலியா போன்ற மலைப் பிரதேசமாகட்டும், இப்பிரதேங்கள் உல்லாசத் துறையைப் போன்றே விளையாட்டுத்துறைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இரண்டையும் இணைந்தாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும், உல்லாசத்துறைக்கு கிடைக்கும் வருவாயைப் போலவே விளையாட்டுத்துறைக்குக் கிடைக்கும் வருவாயைக் அதிகரிக்க செய்ய வேண்டும். இத்திட்டங்களின் மூலம் எதிர்வரும் ஐந்து வருடகாலத்தில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்பது எமது நோக்காக இருக்க வேண்டுமெனவும் ஸ்போர்ட் ரைசிங் நிறுவனத் தலைவர் திலக் வீரசிங்க இதன் போது தெரிவித்தார்.

மொபிடெல் நிறுவனத்தினதும் மற்றும் லின் ஏஷியா ஹேல்டிங் நிறுவனத்தினதும் அனுசரணையுடன் நடைபெற்ற அலைச்சறுக்கு விளையாட்டுத் தொடரானது அறுகம்பையை சூழவுள்ள மக்களின் வருவாயையும், தனது வியாபார நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கான ஒரு விளையாட்டாக அமைந்தது எனவும்  திலக் வீரசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.

 அலைச்சறுக்கு விளையாட்டு சங்கத்தின் தலைவர் ஹிரான் உக்வத்தவின் நெறிப்படுத்தலில் போட்டி இடம்பெற்றது. போட்டிகளை கண்டுகளிப்பதற்கு உள்ளூர் ரசிகர்கள் குறிப்பிடத்தக்க அளவு வருகை தந்திருந்தனர்.

அறுகம்பையில் இருந்து ஏ.ஆர்.பரீத்


Add new comment

Or log in with...