குவைத் தூதரகத்தில் இருந்த 47 பேருக்கு கொரோனா தொற்று | தினகரன்


குவைத் தூதரகத்தில் இருந்த 47 பேருக்கு கொரோனா தொற்று

குவைத் தூதரகத்தில் இருந்த 47 பேருக்கு கொரோனா தொற்று-47 including 3 staff members tested positive for COVID-19-Sri Lanka Embassy in Kuwait Coosed till October 11

ஒக்டோபர் 11 வரை பூட்டு

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம், எதிர்வரும் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என, தூதரகம் அறிவித்துள்ளது.

குறித்த தூதரகத்தின் அதிகாரிகள் 3 பேருக்கும், தூதரகத்தின் காப்பகத்தில் இருந்த பணிப்பெண்கள் 44 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தூதரகம் அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் [email protected] எனும் மின்னஞ்சல் வாயிலாக தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...