போட்டியிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று விபத்து; ஒருவர் பலி | தினகரன்


போட்டியிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று விபத்து; ஒருவர் பலி

போட்டியிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று விபத்து; ஒருவர் பலி-Road Motorcycle Race-Youth Killed-Nintavur

மோட்டார் சைக்கிளில் ஒருவரை ஒருவர் முந்தி ஓட்டப்பந்தயமாக சென்ற இளைஞர் குழுவின் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில்   இன்று (25) இடம்பெற்றது.

போட்டியிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று விபத்து; ஒருவர் பலி-Road Motorcycle Race-Youth Killed-Nintavur

இதன் போது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் போட்டியிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று விபத்து; ஒருவர் பலி-Road Motorcycle Race-Youth Killed-Nintavurஇன்றி வேகமாக சென்ற இளைஞர் குழுவில் ஒருவர் உயிரிழந்ததுடன் இவ்வாறு உயிரிழந்தவர்    நிந்தவூர் 4ம்  பிரிவைச் சேர்ந்த 18 வயது  மதிக்கத்தக்க  நஜாத் என அடையாளம் காணப்பட்டார்.

உயிரிழந்த நபர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் அக்கரைபற்று பக்கமிருந்து வந்துகொண்டிருத்த போது அதே பக்கமாக வந்த கென்டர் லொறியொன்று ஜி.பி.எஸ். சந்தியால் திரும்ப  முற்பட்டுள்ளது. இதன்போது, வேக கட்டுப்பாட்டை இழந்த குறித்த மோட்டார் சைக்கிள் லொறியில் மோதுண்டு   மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மறுமுனையில் வந்த  துவிச்சக்கர வண்டியுடன் மோதி  தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

இதனால்   மேட்டார் சைக்கிளில் வந்த இருவரில்  ஒருவர் சம்பவ இடத்தில்  உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில்  நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச்செல்லப்பட்டார்.

போட்டியிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று விபத்து; ஒருவர் பலி-Road Motorcycle Race-Youth Killed-Nintavur

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்


Add new comment

Or log in with...