மிலிந்த மொரகொட உட்பட 8 புதிய இராஜதந்திரிகளை நியமிக்க அனுமதி | தினகரன்


மிலிந்த மொரகொட உட்பட 8 புதிய இராஜதந்திரிகளை நியமிக்க அனுமதி

மிலிந்த மொரகொட உட்பட 8 புதிய இராஜதந்திரிகளை நியமிக்க அனுமதி-High Posts Committee Approves Nominations of 8 New Diplomats Including Milinda Moragoda

இலங்கையின் தூதரகங்களுக்கு புதிய இராஜதந்திரிகளாக பரிந்துரைக்கப்பட்டிருந்த 08 பேரை குறித்த பதவிகளுக்கு நியமிக்க பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பிலான தெரிவுக்குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி சீ.ஏ. சந்திரபிரேம ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியாகவும், எஸ். அமரசேகர தென் ஆபிரிக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராகவும், ஓய்வுபெற்ற அட்மிரல் கே.கே.வி.பி. ஹரிஸ்சந்திர சில்வா ஆப்கானிஸ்தானுக்கான இலங்கை தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளனர்.

ஜப்பானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக விஷ்ரமால் சஞ்ஜீவ குணசேகர நியமிக்கப்படவுள்ளதுடன், இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொடவும், அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக ரவிநாத் ஆரியசிங்கவும் நியமிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, பேராசிரியர் ஷானிக்கா ஹிரிபுரேகமவை பிரான்ஸிற்கான இலங்கை தூதுவராகவும், கலாநிதி பாலித்த கொஹனவை சீனாவிற்கான இலங்கை தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...