75 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி; ஒருவர் படுகாயம் | தினகரன்


75 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி; ஒருவர் படுகாயம்

75 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி; ஒருவர் படுகாயம்-Three Wheeler Accident-A Person Injured Critically

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா மஸ்கெலியா பகுதியில்  நேற்று (25) இரவு முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியதில் மூவர் காயமடைந்ததாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

75 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி; ஒருவர் படுகாயம்-Three Wheeler Accident-A Person Injured Critically

ஹட்டன்-மஸ்கெலியா பிரதான சாலையில் உள்ள  குடா மஸ்கெலியா, பகுதியில் சாரதி உட்பட மூன்று பேர் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி 75 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளாகியதில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பின் இருக்கையில் இருந்த ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் போக்குவரத்து சார்ஜெண்ட் திலகரத்னே (51125) தெரிவித்தார்.

75 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி; ஒருவர் படுகாயம்-Three Wheeler Accident-A Person Injured Critically

சிறு காயமடைந்தவ ஏனைய இருவரும் வைத்தியசாலையிலிருந்து திரும்பியுள்ளதோடு, படுகாயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி  ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டி ஹட்டனில் இருந்து மஸ்கெலியாவுக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மஸ்கெலியா தினகரன் விஷேட நிருபர் - செ.தி. பெருமாள்)


Add new comment

Or log in with...