கொழும்பின் சில பகுதிகளுக்கு 10 மணி நேர நீர் வெட்டு | தினகரன்


கொழும்பின் சில பகுதிகளுக்கு 10 மணி நேர நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (26) இரவு 8.00 மணி முதல் நாளை (27) காலை 6.00 மணி வரை 10 மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய புதுக்கடை (கொழும்பு 12), கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை (கொழும்பு 13), கிராண்ட்பாஸ் (கொழும்பு 14), மோதறை, மட்டக்குளி, முகத்துவாரம் (கொழும்பு 15) ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் புறக்கோட்டையில் (கொழும்பு 11) குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டு திட்டத்தின் கீழ், அத்தியாவசிய விநியோக குழாயின் மேம்பாட்டு பணிகள் காரணமாக நீர் வெட்டு மேற்கொள்ளப்படுவதாகவும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...