20 இற்கு எதிராக 18 மனுக்கள்; விசாரிக்க ஐவர் கொண்ட நீதிபதிகள் குழாம் | தினகரன்


20 இற்கு எதிராக 18 மனுக்கள்; விசாரிக்க ஐவர் கொண்ட நீதிபதிகள் குழாம்

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனுக்களை  பரிசீலனை செய்வதற்காக 5 பேரை கொண்ட நீதிபதிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட, சிசிர டி அப்ரூ ஆகியோரை கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் இம்மாதம் 29ஆம் திகதி பரிசீலனை செய்யப்படவுள்ளது.

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக இன்றையதினம் (25) மேலும் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை 18 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...