சுகாதார உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியது அமெரிக்கா | தினகரன்

சுகாதார உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியது அமெரிக்கா

கொவிட் -19 தனிநபர் பாதுகாப்பு

கொவிட் 19 வைரஸ் ஒழிப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உபரணங்கள் சிலவற்றை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா பி. டெப்லிட்ஸ் கையளித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23,000 முகக்கவசங்கள், 2400 வெப்பமானிகள், நைட்ரைல் கையுறைகள், தொப்பியுடன் கூடிய 600 தனிமைப்படுத்தல் அங்கிகள், 60 அகச்சிவப்பு வெப்பமானிகள், எளிதாக எடுத்துச் செல்லக் கூடிய 50 ஒட்சிசன் செறிவூட்கள் உட்பட பெருந்தொகையான உபகரணங்களை இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா பி. டெப்லிட்ஸ் சுகாதார அமைச்சரிடம் கையளித்துள்ளார்.

இந்த நன்கொடைக்கான உதவிகளை அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் வழங்கியுள்ளது. கொவிட் 19 வைரஸிலிருந்து இலங்கையின் வர்த்தகம் தொழில்த்துறை என்பன மீட்சிப்பெற்றுவரும் நிலையில் அதற்கு உதவியளிக்கும் முகமாக இந்த உதவிகளை அமெரிக்க வழங்கியுள்ளது.

ஆடைக் கைத்தொழில்துறையில் அமெரிக்க சந்தையை அணுகுவதற்கான புதிய ஏற்றுமதியாளர்களுக்கு உதவியளிக்கவும் ஆற்றலை மேம்படுத்தவும் அமெரிக்கா நிதி உதவி வழங்கியுள்ளது.

இலங்கைக்கு கடந்த 20 ஆண்டுகளில் 26 மில்லியன் பெறுமதியான சுகாதார உதவிகளை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியுள்ளது. இந்த புதிய நன்கொடையானது 2020ஆம் ஆண்டில் கொவிட் 19 வைரஸை ஒழிக்க இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய 6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலானதாகுமெனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...