1,924 கி.கி. கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது | தினகரன்


1,924 கி.கி. கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

வெலம்பட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெகவல்பொல பிரதேசத்தில் 1924 கிலோ 780 கிராம் கழிவு தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கம்பளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு நேற்று (23) கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, லொறியில் கழிவு தேயிலை கொண்டுவந்த குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கழிவு தேயிலை மற்றும் லொறியுடன் வெலம்பட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வெலம்பட பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கழிவு தேயிலை தொடர்பாக அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்காக குறித்த தேயிலை மாதிரி கம்பளை தேயிலை சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வெலம்பட பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...