கொக்கட்டிச்சோலையில் ஆணின் சடலம் மீட்பு | தினகரன்


கொக்கட்டிச்சோலையில் ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு பிரதேசத்தில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (23) குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலை, முனைக்காடு வடக்கைச் சேர்ந்த இரத்தினசிங்கம் உதயன் (35) என்ற இளம் குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(புதிய காத்தான்குடி தினகரன்நிருபர்– எம்.எஸ். நூர்தீன்)


Add new comment

Or log in with...