மன்னாரில் 205.7 கி.கி மஞ்சள்; 104 கி.கி கஞ்சாவுடன் நால்வர் கைது | தினகரன்

மன்னாரில் 205.7 கி.கி மஞ்சள்; 104 கி.கி கஞ்சாவுடன் நால்வர் கைது

மன்னாரில் 205.7 கிலோகிராம் மஞ்சள் மற்றும் 104 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நேற்று (23) மாலை வீதிச் சோதனை சாவடியில் சோதனையிட்டபோது குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.  

மன்னார் – மதவாச்சி வீதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான சிறிய லொறியொன்றை வழிமறித்து சோதனையிட்டபோது, அதில் 8.2 இலட்சம் ரூபா பெறுமதியான மஞ்சளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, அதே காலப்பகுதியில் மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் வீதிச் சோதனை சாவடியில் மேற்கொண்ட சோதனையில் வாகனமொன்றில் கொண்டு செல்லப்பட்ட 20.8 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.


Add new comment

Or log in with...