பாரிய பாறாங்கல் வீழ்வு; ஹட்டன் - கொழும்பு வீதி முடக்கம் | தினகரன்

பாரிய பாறாங்கல் வீழ்வு; ஹட்டன் - கொழும்பு வீதி முடக்கம்

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாரிய பாறாங்கல் புரண்டு வீதியின் குறுக்கே வீழ்ந்ததன் காரணமாக அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், ரம்பாதெனிய விகாரைக்கு அருகில் இன்று (24)  காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாறாங்கல் புரண்டு வீழ்ந்ததன் காரணமாக பயணிகள், பாடசாலை மாணவர்கள், அரச பணியாளர்கள் பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

வீதியில் வீழ்ந்த பாறாங்கல்லை அகற்றும் நடவடிக்கையில் பிரதேசவாசிகளும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் கினிகத்தேனை பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

(ஹட்டன் விசேட நிருபர்-கே.சுந்தரலிங்கம்)

 


Add new comment

Or log in with...