பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸ் தலைவராக ஜீவன் | தினகரன்


பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸ் தலைவராக ஜீவன்

பெருந்தோட்டச் சேவையாளர் காங்கிரஸின் தலைவராக இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இ.தொ.கா. தலைமையகமான சௌமிய பவனில் நேற்று முன்தினம் நடைபெற்ற பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸ் நிர்வாக குழு கூட்டத்தின்போதே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட சேவையாளர்கள் இன்று தோட்டங்களின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் பாடுபடுகின்றனர்.

 இவர்களது வாழ்வு செழிப்பாக உயர வழிவகைகள் செய்து கொடுக்கப்படவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். எதிர்காலத்தில் தோட்டச் சேவையாளர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுமென இதன் போது ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார். நடப்பு வருட நிர்வாக சபைக்கு புதிய நிர்வாக தெரிவுகளில் தலைவராக ஜீவன் தொண்டமான், பொதுச் செயலாளராக பொன்னையா சிவராஜா ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

 

 


Add new comment

Or log in with...