பாராளுமன்ற பொதுக் குழுக்களுக்கு தலைவர் தெரிவு தொடர்பில் சர்ச்சை

பாராளுமன்ற பொதுக் குழுக்களுக்கு தலைவர்களை நியமிக்கும் விவகாரம் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது. குழுக்களின் தலைமை பொறுப்பு எதிரணிக்கு வழங்கப்பட வேண்டுமென எதிரணி கோரியதோடு ஆளும் தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் கூடியது.

வாய்மூல விடைக்காக ஆளும் தரப்பிற்கும் எதிர்த்தரப்பிற்கும் அவகாசம் வழங்குவது தொடர்பில் முதலில் சர்ச்சை ஏற்பட்டதோடு குழுக்களுக்கு தலைவர் நியமனம் தொடர்பிலும் கடும் வாதப்பிரதிவாதம் ஏற்பட்டது. ஆளும் தரப்பு எம்.பிக்களுக்கு வாய்மூல விடைகளை கேட்க குறைவான சந்தர்ப்பமே வழங்கப்பட்டுள்ளதாக மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

முஜீபுர் ரஹ்மான் எம்.பி கூறுகையில்,..

ஆளும் தரப்பு எம்.பிக்களுக்கு ஆளும் தரப்பு குழுக்கூட்டங்களில் கேள்வி எழுப்ப முடியும்.எதிரணிக்கு இங்கு தான் வாய்ப்புள்ளது என்றார்.

சாந்த பண்டார எம்.பி கூறுகையில்,..

கடந்த ஆட்சியில் ஆளும் தரப்பு எம்.பிக்கள் தான் கூடுதலான வாய்மூல கேள்விகளை முன்வைத்தனர் என்றார்.

புத்திக பதிரண எம்.பி,...

பொதுக்குழுக்களின் தலைமை பாதி பாதி இருதரப்பிற்கும் வழங்க வேண்டும்.கோப் குழுவுக்கு ஆளும் தரப்பு நியமித்துள்ளதால் நிதி குழுவுக்கு எதிரிணியை நியமிக்க வேண்டும் என்றார்.

எஸ்.எம்.மரிக்கார் எம்.பி,...

கோப் குழு தலைவராக ஆளும் தரப்பு எம்.பி சரித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.ஒப்பீட்டளவில் அவர் பொறுத்தமானவர்.பாராளுமன்ற அமர்வு நேரடியாக காண்பிக்கப்படுகிறது.பொதுக் குழுக் கூட்டங்களும் நேரடியாக காண்பிக்கப்பட்டன. அவற்றை திருத்தி தாமதித்து காண்பிக்க அரசு தயாராகிறது.

2015 / 2019 காலப்பகுதியில் செயற்பட்ட அரச நிறுவனங்கள் குறித்தே ஆராயப்பட இருக்கிறது.எனவே நேரடி ஒலி,ஔிபரப்பிற்கு அனுமதிக்க வேண்டும். இதற்கு பதிலளித்த சபாநாயகர் இக் குழுக்களே தலைவரை தெரிவு செய்வதாக கூறினார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

 


Add new comment

Or log in with...