சூதாடிய 12 சீன பிரஜைகளுக்கு பிணை | தினகரன்


சூதாடிய 12 சீன பிரஜைகளுக்கு பிணை

சட்டவிரோதமாக சூதாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் 12 பேரும் தலா 25,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  

அத்தோடு, இது தொடர்பான வழக்கு மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 05ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெல் மாவத்தையில் அமைந்துள்ள தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் பணத்திற்காக சூதாடிய குற்றச்சாட்டில் சீன பிரஜைகள் 12 பேர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் நேற்று முன்தினம் (21) கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 9 ஆண்களும் 3 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

அத்தோடு, இச்சந்தேகநபர்களிடமிருந்து 6,554,556 ரூபா பணம், பணம் எண்ணும் இயந்திரம், கணனி, தொலைக்காட்சிப் பெட்டி ஆகியனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Add new comment

Or log in with...