லுணுகலையில் மலைப்பாம்பு மீட்பு | தினகரன்

லுணுகலையில் மலைப்பாம்பு மீட்பு

லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொப்டன் தோட்ட பழைய ஸ்டோர் பிரிவில் 13 அடி நீளமும் 36 கிலோகிராம் நிறையுமுடைய மலைப்பாம்பொன்றை இன்று(23) பிடித்துள்ளனர்.

குறித்த பிரிவில் உள்ள தேயிலை மலையொன்றில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளி அருகே வித்தியாசமான சத்தம் கேட்பதை உணர்ந்த அவர், அருகில் அவதானித்தபோது மலைப்பாம்பு இருப்பதை கண்டு உடனடியாக சக தொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

விரைந்து செயற்பட்ட தொழிலாளர்கள் மலைப்பாம்பை பிடித்து லுணுகலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

லுணுகலை பொலிஸார் குறித்த பாம்பை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

(பசறை நிருபர்– ஆறுமுகம் புவியரசன்)       


Add new comment

Or log in with...