அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தயாரிப்பான 'சொட்கண்' (Shotgun) ரக துப்பாக்கியொன்று, மைதானம் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த துப்பாக்கி இன்று (22) சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே கிழக்கு-3 பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ரத்னமல தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் இத்துப்பாக்கியை மீட்டுள்ளனர்.
குறித்த இங்கிலாந்து தயாரிப்பு துப்பாக்கியுடன் 6 ரவைகளும் கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீட்கப்பட்ட துப்பாக்கி தற்போது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
(பெரியநீலாவணை விசேட நிருபர் - ஏ.எல்.எம். சினாஸ்)
Add new comment