சட்டவிரோத சூதாட்ட விடுதி; 12 சீனர்கள் கைது | தினகரன்


சட்டவிரோத சூதாட்ட விடுதி; 12 சீனர்கள் கைது

சட்டவிரோத சூதாட்ட விடுதி; 12 சீனர்கள் கைது-12 Chinese National Arrested for Illegally Gambling-Kollupitiya

ரூபா 65 இலட்சம் பணம், பணம் எண்ணம் இயந்திரம் உள்ளிட்டவை மீட்பு

கொள்ளுப்பிட்டியிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பொன்றில் சட்டவிரோதமாக நடாத்திச் செல்லப்பட்ட சூதாட்ட விடுதியொன்றில், சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சீன நாட்டைச் சேர்ந்த 9 ஆண்கள் மற்றும் 3 பெண்களை கொள்ளுப்பிட்டி பொலிசார் கைது செய்துள்ளனர்.

நேற்று (21) இரவு 9.30 மணியளவில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் சந்தேகநபர்களிடமிருந்து ரூ. 6,554,556 பணம், பணம் எண்ணும் இயந்திரம், சூதாட்ட கணனி ஒன்று, தொலைக்காட்சி பெட்டிகள் இரண்டு உள்ளிட்ட சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று (22) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, கொள்ளுப்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...