கொழும்புக்கு நேற்று அழைத்துவரப்பட்ட பிள்ளையான் இன்று பாராளுமன்றில் | தினகரன்

கொழும்புக்கு நேற்று அழைத்துவரப்பட்ட பிள்ளையான் இன்று பாராளுமன்றில்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காகவே நேற்று (திங்கட்கிழமை) சந்திரகாந்தன் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2015ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளார்.இவர் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்பு வாக்கினைப்பெற்று பாராளுமன்ற தெரிவுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Add new comment

Or log in with...