வெளிநாடுகளிலிருந்து மேலும் 764 இலங்கையர் நேற்று நாடு திரும்பினர் | தினகரன்

வெளிநாடுகளிலிருந்து மேலும் 764 இலங்கையர் நேற்று நாடு திரும்பினர்

கொரோனா தொற்று காரணமாக தாய் நாட்டிற்கு திரும்பி வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 724 பேர் நேற்று நாடு திரும்பியுள்ளனர். அவுஸ்திரேலியா, டுபாய், சென்னை மற்றும் ஜப்பானில் இருந்து இவர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவில் இருந்து 288 பேரும், டுபாயில் இருந்து 420 பேரும், சென்னையில் 6 பேரும் மற்றும் ஜப்பானில் இருந்து 10 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் மத்தள மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் ஹோட்டல்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் மேலும் 12 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு நேற்று (21) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,100 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை 3287 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...