43 வயதிலும் கால்பந்து ஆடும் பிரேசில் வீரர் ஹில்டன் | தினகரன்


43 வயதிலும் கால்பந்து ஆடும் பிரேசில் வீரர் ஹில்டன்

இந்த பருவக்காலத்திற்கான பிரெஞ்சு லீக் தொடரில், கடந்த  செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியாளர்களான லியொன் அணியும் மொண்ட்பெலியர் அணியும் மோதின.

இப்போட்டியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 43வயதை பூர்த்தி செய்த  மொண்ட்பெலியர் அணியின் தலைவரான விடொரினோ ஹில்டன்   விளையாடினார்.

இதன்மூலம்  கடந்த 65வருடங்களின் பின்பு  லீக் 1தொடரில் விளையாடிய 43வயதிற்கு மேற்பட்ட வீரர் என்ற சாதனையை ஹில்டன் படைத்தார்.

இதற்கு முன்னதாக 1956இல் 44வயதான ரோஜர் கோர்டோய்ஸ் , ட்ரொயிஸ்  அணிக்காக விளையாடி இருந்தார்.

2002இலிலிருந்து ஐரோப்பாவில் விளையாடிவரும் ஹில்டன், 1996ஆம் ஆண்டு தனது 19வயதில் பிரேசிலைச் சேர்ந்த ஷப்போகொன்ஷி  அணியுடன் தனது தொழில்முறை கால்பந்து வாழக்கையை ஆரம்பித்தார்.

பின்கள வீரரான ஹில்டன், தனது சொந்த நாடான பிரேசிலுக்காக எந்த வித போட்டிகளிலும் விளையாடாத போதிலும், கழக மட்டங்களில் 1996இலிருந்து தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். 

இதுவரை 569தொழில்முறை கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ள ஹில்டன், மொண்ட்பெலியர் அணியுடன் கடந்த 2011இலிருந்து விளையாடி வருகிறார்.

இதேவேளை, குறித்த போட்டியை 2க்கு 1 என மொண்ட்பெலியர் அணி வென்ற போதிலும், ஹில்டன் போட்டியின் 81 ஆவது நிமிடத்தில் துரதிஷ்டவசமாக சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.


Add new comment

Or log in with...