அறுகம்பையில் 26ம் 27ம் திகதிகளில் தேசிய, பகிரங்க அலைச்சறுக்கு போட்டி

இலங்கை அலைச்சறுக்கு சங்கம் மற்றும் இலங்கை ஸ்போர்ட்ஸ் ரைசிங் (எல். எஸ். ஆர்) நிறுவனமும் இணைந்து இம் மாதம் 26ம் 27ம் திகதிகளில் அறுகம்பை கடற்கரை பிரதேசத்தில் தேசிய மற்றும் பகிரங்க அலைச்சறுக்கு விளையாட்டு (சேர்பிங்) தொடரொன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார்.

கொவிட் 19தொற்றின் பின் விளையாட்டுத்துறையை முன்னேற்றுவதற்காகவும், கிழக்கு மாகாண உல்லாசத் துறையை வளர்ச்சியடை செய்வதற்காகவும் இம்மாதம் 27ம் திகதியன்று உலக உல்லாச தினம் அமைந்துள்ளதால் அத்தினத்தை முன்னிட்டு உல்லாச அமைச்சுடன் இணைந்து இத்தொடரை நடாத்த உத்தேசித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் பின் ஏனைய சர்வதேச நாடுகளைப் போல் இலங்கையிலும் விளையாடுத்துறை பின்னடவை சந்தித்திருந்தாலும் சில நாடுகளில் தற்போது மெல்ல மெல்ல சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருதை சுட்டிக்காட்டிய அமைச்சர், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இலங்கையிலும் சர்வதேச போட்டிகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவிததார்.

“ நமது விளையாட்டு வீரர்களை விவசாயிகளாக மாற்ற வேண்டும்.அவர்களை நாம் நாட்டுக்காக பயனுள்ள அறுவடைகளாக மாற்றவேண்டும்.

கடந்த காலங்களில் வீரர்களை நடத்திய விதம் கவலை அளிக்கிறது. சில விளையாட்டுகளையும், விளையாட்டு வீரர்களையும் மட்டுமே நாம் உயர்ந்த நிலையில் கவனித்தோம். ஆனால் எல்லா விளையாட்டு வீரர்களையும், விளையாட்டையும் ஒரே தரத்தில் பார்க்கவேண்டும். சர்வதேச ரீதியில் ஒரு விளையாட்டு வீரரை உருவாக்க அரசாங்கம் உதிவிசெய்ய வேண்டும். அதன்பின் அவரிடமிருந்து நாடும் இலாமடையலாம். ஆனால் இங்கு சில வீரர்கள் திறமைகாட்டினால் அவரை இன்னும் தமது திறமைகளை வர்த்துக்கொள்வதற்கு, பாதணி, சீருடை, சிறந்த பயிற்சி, உணவு என செலவுகள் அதிகரிக்குமே என சல பெற்றோர்கள் கவலையடைகின்றனர். இந்நிலைமையை நாம் மாற்றியமைக்க வேண்டும். இந்த நிலைமையிலிருந்து, விளையாட்டையும் வீரர்களையும் மீட்டெடுக்க நாம் வேலைத் திட்டமொன்றை தயாரிக்க வேண்டும்’ என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“விளையாட்டுடன் கூடிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது எப்படி? விளையாட்டுடன் இணைந்த உல்லாசப் பயணத்துறையை முன்னேற்றுவது எப்படி? கிழக்கு, வடக்கு கடற்கரையாகட்டும், பதுளை, நுவரெலியா போன்ற மலைப் பிரதேசமாகட்டும், இப்பிரதேங்கள் உல்லாசத் துறையைப் போன்றே விளையாட்டுத்துறைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இரண்டையும் இணைந்தாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும், உல்லாசத்துறைக்கு கிடைக்கும் வருவாயைப் போலவே விளையாட்டுத்துறைக்குக் கிடைக்கும் வருவாயைக் அதிகரிக்க செய்ய வேண்டும்.

இத்திட்டங்களின் மூலம் எதிர்வரும் ஐந்து வருடகாலத்தில் ஒருபில்லியன் டொலர் வருமானமாக ஈட்ட வேண்டும் என்பது எமது நோக்காக இருக்க வேண்டுமெனவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

மொபிடெல் நிறுவனத்தினதும் மற்றும் லின் ஏஷியா ஹேல்டிங் நிறுவனத்தினதும் அனுசரணையுடன் நடைபெறவுள்ள அலைச்சறுக்கு விளையாட்டுத் தொடரானது அறுகம்பையை சூழவுள்ள மக்களின் வருவாயையும், தமது வியாபார நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கான ஒரு விளையாட்டாக அமையும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உல்லாசத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விசேட அதிதியாகக் கலந்துகொண்ட மேற்படி ஊடக சந்திப்பில் அலைச்சறுக்கு விளையாட்டு சங்கத்தின் தலைவர் ஹிரான் உக்வத்த, இலங்கை ஸ்பொர்ட் ரைசிங் நிறுவனத் தலைவர் திலக் வீரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...