ரவி, அலோசியஸ் மீது இலஞ்ச ஊழல் வழக்கு | தினகரன்


ரவி, அலோசியஸ் மீது இலஞ்ச ஊழல் வழக்கு

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிற்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்  இன்று (21)  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள சொகுசு தொடர்மாடி வீட்டை வழங்கியமை மற்றும் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவர்கள் இருவர் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி முதல் செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் குறித்த வீட்டை வழங்கியமை மற்றும் பெற்றுக்கொண்டமை இடம்பெற்றுள்ளதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


Add new comment

Or log in with...