கிளிநொச்சியில் புகையிரத்தில் மோதுண்ட இளைஞன் சடலமாக மீட்பு | தினகரன்

கிளிநொச்சியில் புகையிரத்தில் மோதுண்ட இளைஞன் சடலமாக மீட்பு

கிளிநொச்சியில் புகையிரத்தில் மோதுண்ட இளைஞன் சடலமாக மீட்பு-Kilinochchi Train Accident-Youth Dead

கிளிநொச்சியில் புகையிரத்தில் மோதுண்ட இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (21) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மன்னவாகினி புகையிரத்தில் ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து 6.25 மணிக்கு புறப்பட்ட மந்தகதி  (4082) புகையிரதம் கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீற்றர் தூரத்தில்  வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் புகையிரத்தில் மோதுண்ட இளைஞன் சடலமாக மீட்பு-Kilinochchi Train Accident-Youth Dead

குறித்த சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலத்தை புகையிரத ஊழியர்கள் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவத்தில், கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யோகேந்திரன் அஜந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சியில் புகையிரத்தில் மோதுண்ட இளைஞன் சடலமாக மீட்பு-Kilinochchi Train Accident-Youth Dead

இது தற்கொலையாக இருக்கலாம் எனும் கோணத்தில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.

(கிளிநொச்சி குறூப் நிருபர் - எம். தமிழ்செல்வன், பரந்தன் குறூப் நிருபர் - யது பாஸ்கரன்)


Add new comment

Or log in with...