நாயுடன் மோதி இரு மோட்டார் சைக்கிள்கள் விபத்து; ஒருவர் பலி | தினகரன்

நாயுடன் மோதி இரு மோட்டார் சைக்கிள்கள் விபத்து; ஒருவர் பலி

நாயுடன் மோதி இரு மோட்டார் சைக்கிள்கள் விபத்து; ஒருவர் பலி-Motorcycle Collided With Dog and Collided with Another Motorbike-A Person Killed-3 More Injured

மட்டக்களப்பு, மாவடிவேம்பு பிரதேச்தில் இரண்டு  மோட்டார்  சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர்  காயமடைந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (21) அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில் சித்தாண்டி, நாவலர் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய பி. சதீஸ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

நாயுடன் மோதி இரு மோட்டார் சைக்கிள்கள் விபத்து; ஒருவர் பலி-Motorcycle Collided With Dog and Collided with Another Motorbike-A Person Killed-3 More Injured

சித்தாண்டியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு முன்பாக தெருநாயுடன் மோதி கட்டுபாட்டை இழந்து எதிர்த் திசையில் மூன்றுபேர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இவ்விபத்தில் மூவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்துள்ளார்.

நாயுடன் மோதி இரு மோட்டார் சைக்கிள்கள் விபத்து; ஒருவர் பலி-Motorcycle Collided With Dog and Collided with Another Motorbike-A Person Killed-3 More Injured

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(ஏறாவூர் நிருபர் - நஸீர் மொஹமட் கௌஸ்)

Add new comment

Or log in with...