வத்தளை பிரதேசத்தில் 24 மணித்தியால நீர் வெட்டு | தினகரன்

வத்தளை பிரதேசத்தில் 24 மணித்தியால நீர் வெட்டு

வத்தளை பிரதேசத்தில் 24 மணித்தியால நீர் வெட்டு-24-Hr Water Cut at Wattala Area-NWSDB

வத்தளை, தெலங்கபாத, எவரிவத்த, ஹேகித்த, பள்ளியவத்தை, பலகல, எலகந்த பகுதிகளில் இன்றிரவு (21) 8.00 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஹேகித்த வீதியில் நீர் விநியோக நடவடிக்கைக்கான பணிகள் காரணமாக, இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இன்றிரவு (21) 8.00 மணி முதல் நாளை (22) இரவு 8.00 மணி வரையான 24 மணித்தியாலங்களுக்கு, குறித்த பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


Add new comment

Or log in with...