விடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தோரை நினைவு கூருவது தவறல்ல | தினகரன்

விடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தோரை நினைவு கூருவது தவறல்ல

அடிப்படை உரிமை; எவராலும் தடுக்க முடியாது – இரா.சம்பந்தன்

 

விடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூருவது அடிப்படை உரிமையாகும் என்றும் அதனை யாரும் தடுக்க முடியாது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

அதேநேரம், உரிமைகள் மறுக்கப்படும் சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் செயற்பாடுக்கு அவர் பாராட்டும் தெரிவித்துள்ளார்.  தியாக தீபம் திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவுகூரலுக்கு வடக்கு, கிழக்கில் நீதிமன்றங்களின் ஊடாக தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இவ்விதமான விடயங்களில் எம்மிடையே ஒற்றுமை மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், தொடர்ச்சியாக பொதுவிடயங்களில் ஒற்றுமையாக செயற்பட வேண்டியதும் அவசியமாகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...