கடல்வழியாக கொண்டுவரப்பட்ட 1,000 கிலோ மஞ்சள் மூடைகள் | தினகரன்

கடல்வழியாக கொண்டுவரப்பட்ட 1,000 கிலோ மஞ்சள் மூடைகள்

சட்டவிரோதமாக கடல்வழியே நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 1000 கிலோ மஞ்சள் கட்டிகள் நேற்று அதிகாலை சிலாபம் கடற்பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இப்பகுதியில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே இயந்திரப்படகு ஒன்றிலிருந்து மஞ்சள்கட்டி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மஞ்சள் மூடைகள் பறிமுதல் செய்யப்பட்ட இயந்திரப்படகு சிலாபம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்குச் சொந்தமானது என்பதுடன், படகிலிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர்களையும், இயந்திரப்படகின் உரிமையாளரையும் கைது செய்வதற்கு பொலிஸாருடன் இணைந்து கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மீட்கப்பட்டுள்ள 1,000 கிலோ மஞ்சளின் பெறுமதி சுமார் 40 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

முன்னேஸ்வரம் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...