இராகலையில் தீ விபத்து; மூன்று கடைகள் தீக்கிரை | தினகரன்

இராகலையில் தீ விபத்து; மூன்று கடைகள் தீக்கிரை

இராகலையில் தீ விபத்து; மூன்று கடைகள் தீக்கிரை-Fire Accident-3 Shops Burned-Ragala-Nuwara Eliya

நுவரெலியா, இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை பிரதான நகரில் இராகலை ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியின் மருங்கில் அமைந்துள்ள கடைத்தொகுதிகளில் இன்று (19) அதிகாலை 1.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சில்லறை கடை, கோழி கடை மற்றும் தொடர்பாடல் நிலையம் ஆகிய மூன்று கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராகலையில் தீ விபத்து; மூன்று கடைகள் தீக்கிரை-Fire Accident-3 Shops Burned-Ragala-Nuwara Eliya

இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

பிரதேச பொது மக்கள், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், இராகலை பொலிஸார் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

இராகலையில் தீ விபத்து; மூன்று கடைகள் தீக்கிரை-Fire Accident-3 Shops Burned-Ragala-Nuwara Eliya

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

ஏற்பட்ட தீ காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)


Add new comment

Or log in with...