யாழ். மாவட்ட வீட்டுத்திட்ட பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு

அங்கஜன் இராமநாதன் உறுதி

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

வீட்டுத்திட்டம், மீள்குடியேற்றம், காணிக்கொள்வனவு மற்றும் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களின் கட்டுமானங்கள் காலதாமதம் தொடர்பான கலந்துரையாடல் ேநற்று (18) தெல்லிப்பளை பிரதேச செயகத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் மற்றும் வீட்டுத்திட்டம் சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாக களவிஜயம்  மேற்கொண்டு நிலமைகள் தொடர்பில் அறிந்து கொண்டுள்ளார்.

அவர்களுக்கு நானும் யாழ். மாவட்டத்தின் வீடமைப்பு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் விளக்கம் தெரிவித்திருந்தேன்.

அந்த விடயம் தொடர்பில் அதிகூடிய கரிசனை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த உறுதியளித்தார்.

அது மட்டுமன்றி வீடமைப்பு தொடர்பான அமைச்சராக இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வடபகுதி மக்களின் வீட்டுத்திட்ட பிரச்சினை தொடர்பில் அதி கூடிய கவனம் செலுத்தியுள்ளார்.

எமது இந்த புதிய அரசாங்கம் மூலம் விரைவில் காணி அற்றவர்களுக்கான காணி கொள்வனவு, வீடுகள் இல்லாமல் தவிப்போருக்கான வீட்டுத்திட்டங்களை இனங்கண்டு வழங்கல், நலன்புரி நிலையங்களில் வசிப்பவர்களுக்கு சொந்த வீடுகள் வழங்கல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்போம்.

 

 


Add new comment

Or log in with...