வெளிநாட்டு முதலீடுகளை கவர புதிய தொழில்நுட்பம்

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் அரசாங்கம் புதிய நுட்பங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக நாணய, மூலதன சந்தை மற்றும் தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சரான அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

“நாடானது பொருளாதார ரீதியாக பல சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் இது மீள் எழுச்சி பெறும். கடந்த 05 வருடங்களில் முன்னெடுக்கப்பட்ட சீரற்ற பொருளாதார செயற்பாடுகளே தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாகும்.

கொவிட் -19 தொற்றிலிருந்து நாம் விடுப்பட்டுள்ளோம். இது எமது பொருளாதாரத்திற்கு சாதகமானதாகும் என அவர் இதன் போது தெரிவித்தார். கடந்த 05 வருடங்களில் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கீடு வீழ்ச்சியடைந்துள்ளது.  தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் சேவை கணக்கு 90% இற்கும் அதிகமாகும் எனவும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...