அக்கரைப்பற்றில் ஹெரோயினுடன் இருவர் கைது | தினகரன்

அக்கரைப்பற்றில் ஹெரோயினுடன் இருவர் கைது

அக்கரைப்பற்றில் ஹெரோயினுடன் இருவர் கைது-2 Suspect With Heroin Arrested at Akkaraipattu
(படம்: லங்கா டியூப்)

அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கரைபற்று, பழைய சினிமா வீதியில் 2 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று (17) மாலை 6.55 மணியளவில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில், சந்தேகநபருக்கு ஹெரோயினை விற்ற பிரதான சந்தேகநபர், அக்கரைப்பற்று நகரில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவிததனர்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து 120 கிராம் ஹெரோயின், ரூ. 54,000 பணம், சிறிய டிஜிற்றல் தராசு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் 30 வயதுடைய, அக்கரைப்பற்றை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை இன்றையதினம் (18) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No photo description available.


Add new comment

Or log in with...