டயமன்ட் கப்டனுக்கு நீதிமன்றில் ஆஜராக அழைப்பாணை விடுப்பு | தினகரன்

டயமன்ட் கப்டனுக்கு நீதிமன்றில் ஆஜராக அழைப்பாணை விடுப்பு

தீப்பற்றி எரிந்த MT New Diamond எண்ணெய்க் கப்பலின் கப்டனுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 28 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் MT New Diamond எண்ணெய்க் கப்பலின் கப்டனுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, MT Diamond கப்பலின் மாலுமியை சந்தேக நபராக பெயரிடுவதற்கும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சட்டச் சார்பான முன்னறிவிப்பை -  பெற்றுக்கொள்ளுமாறு சட்ட மாஅதிபர் தப்புள டி.சி. லிவேரா குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பான தகவலை சட்ட மாஅதிபரின் இணைப்பாளரான சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ண தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டு இலக்கம் 35 இன் கீழான சமுத்திர மாசடைவதை தடுக்கும் சட்டத்தின் 25, 26, 38 மற்றும் 53 போன்ற சரத்துக்களின் கீழ் தண்டனை பெறக்கூடிய குற்றங்கள் தொடர்பில் போதுமான விடயங்கள் குறித்து நியாயமான சந்தேகம் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பது சட்ட மாஅதிபரின் நிலைப்பாடாகும். இது குறித்து சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளமை குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை இடுமாறும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 


Add new comment

Or log in with...