இன்று முதல் ரூபா 2,000 அபராதம் | தினகரன்

இன்று முதல் ரூபா 2,000 அபராதம்

வீதி ஒழுங்கைச் சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு எதிராக இன்று (17) முதல் அபராதம் விதிக்கப்படும் என, பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய, ஒழுங்கை வீதிச் சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு 2,000ரூபா அபராதம் அறவிடப்படும் என, போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகொட தெரிவித்தார்.

இதேவேளை, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கைச் சட்டத்தை கண்காணிக்க இராணுவ பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட 20இடங்களிலிருந்து இராணுவ பொலிஸார் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வீதி ஒழுங்கைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதிகளின் நிலைமையை ஆராய்வதற்காக விமானப்படை ட்ரோன்கள் அடங்கிய 4குழுக்கள் இயங்கி வருவதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதி ஒழுங்கைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவசியமேற்படுமாயின், முப்படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...