தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது

மத்திய அரசு தகவல்

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

இந்தியாவில் கொரோனா தாக்கத்தின் சராசரி 8.4சதவீதமாக உள்ளது. 

தற்போதைய நிலவரப்படி கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய 5மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கிறது. கடந்த 3வாரங்களில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிப்பு 21.5சதவீதமாக உள்ளது. இந்த மாநிலத்தில் 51லட்சத்து 73ஆயிரம் பேரிடம் பரிசோதனை நடந்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 12சதவீதமாக இருக்கிறது. 

டெல்லியில் இது 8.9சதவீதமாக உள்ளது. மாநிலங்களில் அதிக சோதனைகள் நடத்த வேண்டும் என்பதை மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. இதையடுத்து உத்தரபிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. 

தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் சோதனைகள் நடத்தப்பட்டன. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்தியா முழுவதும் 5.8கோடி சோதனைகள் நடந்துள்ளது. இதில் 50லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதுவரை 81ஆயிரத்து 331பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். 

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உத்தர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் 60சதவீதம் பேர் உள்ளனர். 

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேச மாநிலங்களில் சராசரியாக 50ஆயிரத்துக்கும் அதிக மானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் 18மாநிலங்களில் 5ஆயிரம் முதல் 50ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்புள்ளது. 14மாநிலங்களில் சராசரியாக 5ஆயிரம் பேருக்கு பாதிப்புஉள்ளது. 

மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.   


Add new comment

Or log in with...