முள்ளிவாய்க்காலில் பல்வேறு வெடிபொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிழக்கு கடற்படை கட்டளை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின்போது, கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த குறித்த தனியார் காணியில் இடிபாடுகளுக்கு மத்தியில் நேற்று (15) சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, குறித்த வெடிபொருட்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினால் குறித்த பிரதேசத்தில்  மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக, கடற்படை தெரிவித்துள்ளது.

இச்சோதனையின்போது 3 பிளாஸ்டிக் பைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 45 கிலோகிராம் டீ.என்.டீ வெடிபொருட்கள்,  சுமார் 5 கிலோகிராம் சீ4 வகை வெடிபொருள், 81 மில்லிமீற்றர் வகை 7 மோட்டார் குண்டுகள், அடையாளம் காணப்படாத 15 உருகிகள் (Fuse), 118 எக்ஸ்பெலின் சார்ஜர்கள், கிளேமோர் குண்டுகள், அடையாளம் காணப்படாத குண்டொன்றின் 8 கிலோகிராம் நிறையுடைய ஒரு பகுதியும், மின்சார டெட்டனேட்டர்களும் மீட்கப்பட்டுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள வெடிபொருட்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக கடற்படையினரால் முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, குறித்த பிரதேசத்தில் மேலும் வெடிபொருட்கள் உள்ளதா என்று சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கடற்படை தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...