அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் பிரியாவிடை வைபவம் | தினகரன்

அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் பிரியாவிடை வைபவம்

அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் இருவருட ( 2018 / 2019 ) பயிற்சி நெறியைப்பூர்த்தி செய்த மாணவ ஆசிரியர்களின் பிரியாவிடை வைபவம் கலாசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

விழாக்குழுவின் தலைவர் ஆசிரியர் இ.கெங்காநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையின் அதிபர் பீ.பரமேஸ்வரன் கலந்து கொண்டார்.

இதன்போது கல்லூரியின் அதிபர் பீ.பரமேஸ்வரனின் சேவையினைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், மாணவ ஆசிரியர்களின் கலை,கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றம் செய்து வைக்கப்பட்டன.

பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களினால் கல்லூரிக்கு புதிய பெயர்ப் பலகையினை அன்பளிப்புச் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...