20: நிறைவேற்ற அவசரப்படுவதில் நியாயமான காரணம் இல்லை | தினகரன்


20: நிறைவேற்ற அவசரப்படுவதில் நியாயமான காரணம் இல்லை

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அவசரப்படுவதில் எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 20 ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட மீளாய்வுக்குழு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முன்மொழியப்பட்ட வெள்ளைக் காகிதமாக உள்ள அரசியலமைப்பின் 20 வது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்ட மீளாய்வுக்குழு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள அவசரப்படுவதற்கு எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை.

நாடொன்று சமத்துவம் மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை நோக்கிப் பயணப்படுவதை உறுதிசெய்வதற்கு ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மிகவும் அவசியமானவையாகும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...