52 கி.கி. கஞ்சாவுடன் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது | தினகரன்

52 கி.கி. கஞ்சாவுடன் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது

- 920 கிலோகிராம் மஞ்சளும் மீட்பு

மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, பாரியளவிலான போதைப்பொருள் மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட நால்வர் 52 கிலோகிராம் கஞ்சா மற்றும் கடத்தப்பட்ட 920 கிலோகிராம் மஞ்சளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், மன்னார் பொலிஸார் இணைந்து சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, இச்சோதனையின்போது 1.725 மில்லியன் ரூபா (ரூ. 1,725,000) மற்றும் 100 அமெரிக்க டொலரின் 5 நாணயத்தாள்கள், உழவு இயந்திரம், லொறி ஆகியவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...