ஆடைத்தொழிற்சாலை பஸ் விபத்து; 10 பேர் காயம் | தினகரன்


ஆடைத்தொழிற்சாலை பஸ் விபத்து; 10 பேர் காயம்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளிகம பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 10 பேர் காயமுற்று,டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக,நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்,

ஹட்டனிலிருந்து பொகவந்தலாவை நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற  ஹட்டன் டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸும்,  பொகவந்தலாவையிலிருந்து ஹட்டன் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிவந்த சிட்டி ரைடர்  எனும் பஸ்ஸும் மோதியே விபத்து சம்பவித்துள்ளது.

இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்ற ஊழியர்கள் 10 பேர் காயமுற்று டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதில் இருவர் வீடு திரும்பிய நிலையில் 08 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்,

சிட்டி ரைடர் எனும் பஸ்ஸில் திடீரென பிரேக் இயங்காத நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை மீறி  இ.போ.ச பஸ்ஸில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாணைகளை முன்னெடுப்பதாக நோர்வூட் பொலிஸார்  தெரிவித்தனர். 

(நோட்டன் பிரிட்ஜ்  நிருபர் - எம்.கிருஸ்ணா)


Add new comment

Or log in with...