மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டிகள் பஸ் ஒழுங்கையில் | தினகரன்


மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டிகள் பஸ் ஒழுங்கையில்

நாளை (16) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் ஆகியன, பஸ் ஒழுங்கையில் பயணிக்க வேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கொழும்பு நகர் மற்றும் அதணை அண்டிய பகுதிகளிலுள்ள நான்கு பிரதான வீதிகளை மையமாகக் கொண்டு பஸ் முன்னுரிமை ஒழுங்கை முறை மற்றும் வீதி ஒழுங்கை விதிமுறை

நேற்று (14) முதல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய பேஸ்லைன் வீதியில் புதிய களனி பாலத்திலிருந்து ஒருகொடவத்த, தெமட்டகொடை, பொரளை, நாரஹேன்பிட்டி, ஊடாக ஹைலெவல், பேஸ்லைன் சந்தி வரையும் வீதி ஒழுங்கை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஶ்ரீ ஜயவர்தனபுர மாவத்தையின் பொல்துவ சந்தியிலிருந்து இராஜகிரிய மேம்பாலம், ஆயுர்வேத சுற்றுவட்டம், டி.எஸ். சேனநாயக்க சந்தி, ஹோர்டன் சுற்றுவட்டம், நூலக சந்தி மற்றும் லிபர்ட்டி சுற்றுவட்டம் வரையும் வீதி ஒழுங்கை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனைத் தவிர காலி வீதியில் வில்லியம் சந்தியிலிருந்து டிக்மன் வீதிச் சந்தி, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, காலிமுகத்திடல் சுற்றுவட்டம், என்.எஸ்.ஏ சுற்றுவட்டம் வரை வீதி ஒழுங்கை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அனுலா வித்தியாலயத்தின் அருகிலிருந்து ஹைலெவல் வீதி, பேஸ்லைன் சந்தி, பார்க் வீதி சந்தி, திம்பிரிகஸ்யாய சந்தி, தும்முல்லை சுற்றுவட்டம், கிளாஸ் ஹவுஸ் மற்றும் பித்தளை சந்தி வரை வீதி ஒழுங்கைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...