20: ஆய்வு செய்ய அமைச்சர் பீரிஸ் தலைமையில் விசேட குழு

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்;

நாளை பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ச நியமித்துள்ளார்.

கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் இக்குழு செயற்படவுள்ளதுடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் அக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். கல்வியமைச்சர் பேராசிரியர்  ஜீ.எல். பீரிஸூடன் அமைச்சர்களான அலி சப்ரி, உதய கம்மம்பில, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர்கள் சுசில் பிரேமஜயந்த, சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, பிரேமநாத் டி தொலவத்த ஆகியோரும் இக் குழுவில் அடங்குகின்றனர்.மேற்படி குழுவின் அறிக்கை நாளை 15 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்படவுள்ளது. (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...