சப்ரகமுவ, களுத்துறை, நுவரெலியாவில் மழை | தினகரன்

சப்ரகமுவ, களுத்துறை, நுவரெலியாவில் மழை

- பல இடங்களில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு

மேல், சப்ரகமுவ,மத்திய மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும்50 மில்லிமீற்றருக்கும்  அதிகளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை, மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும்

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...