புத்தளம் உப்பளத்துக்குள்ளிருந்து 68 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் | தினகரன்

புத்தளம் உப்பளத்துக்குள்ளிருந்து 68 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்

புத்தளம், புழுதிவாசல் பகுதியில் 68 கிலோ கஞ்சா மற்றும் 36 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சொகுசு வாகனங்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம், புழுதிவாசல் பகுதியில் உப்பளமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 68 கிலோ கஞ்சா மற்றும் 36 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பொலிஸ்நிலைய ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஒரு சொகுசு ஜீப் மற்றும் போதைப்பொருட்களுடன் ஒரு காரை பொலிஸார் பறிமுதல் செய்தனர். உப்பளத்திலுள்ள ஒரு கட்டடத்தின் அலுமாரியில் கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

 

 

வண்ணாத்திவில்லு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...