தன்னிறைவான செயல்திறன் உடன் OPPO A1K | தினகரன்

தன்னிறைவான செயல்திறன் உடன் OPPO A1K

தன்னிறைவான செயல்திறன் உடன் OPPO A1K-First under 20k phone from OPPO

சக்திவாய்ந்த மின்கலம்; பெரிய திரையுடன் அதிக இலங்கையரை ஈர்க்கிறது

ரூபா 19,990 எனும் விலையுடன், 000mAh மின்கல் மற்றும் 2GB RAM + 32GB ROM கொண்ட OPPO A1k ஆனது ரூபா 20,000 இற்கும் குறைவான தொலைபேசி வரிசையில் பூரண செயற்றிறனை ஈடுசெய்யும், புகழ்பெற்ற கையடக் தொலைபேசி மற்றும் உபகரணங்களை வழங்கும் தரக்குறியீடான OPPOவின் கையடக்க தொலைபேசியாக அமைவதோடு, இலங்கையர்களுக்கும் இப்போது OPPO வில் காணப்படும் அனைத்து சிறந்த அம்சங்களையும் கொண்ட, 'பட்ஜட்' இற்குள் அமையும் உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போனை பெறும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

ரூபா 20,000 இற்கும் குறைவான சந்தைப் பெறுமதியில் ஸ்மார்ட்போன் ஒன்றை வழங்குவது என்பது இலங்கை மொபைல் போன் சந்தையில் ஒரு சவாலான மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகும் என்பதோடு, இது நாட்டில் வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை மேலும் ஊக்குவிப்பதற்கான புத்துணர்ச்சியூட்டும் நடவடிக்கையாக அமையவுள்ளது.

A1k கையடக்க தொலைபேசியானது, 4000mAh மின்கலத்தை கொண்டுள்ளதுடன், இப்பிரிவில் இது முன்னணி இடத்தை வகிக்கின்றது. சார்ஜ் செய்யாமல் ஒரு நாள் முழுவதும் (சுமார் 17 மணிநேரம்) பயன்படுத்துவதை இது உறுதி செய்கிறது. ‘Bigger Memory’ எனும் பெருமை கொண்ட இத்தொலைபேசி, 32GB ROM மற்றும் 256GB வரை அதிகரிக்கப்படக்கூடிய நினைவகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. A1K ஆனது, உங்கள் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தரவுகளுக்கான பெரிய சேமிப்பகத்தை கொண்டுள்ளது. OPPO A1K ஆனது 6.1 அங்குல HD+ திரையுடன் வருகிறது. இது, வீடியோக்களைப் பார்க்கும்போது அல்லது கேம்களை விளையாடும்போது சிறப்பான அனுபவத்தை பெற வழிவகுக்கிறது. Corning Gorilla Glass 3 திரை ஆனது திரையின் உறுதித்தன்மையை மேலும் மேம்படுத்துகிறது.

OPPO A1K தொலைபேசி, மெட் (matte) மேற்பரப்புடன் எளிய வடிவமைப்போடு, கையில் பிடிப்பதற்கு இலகுவான வகையில் நேர்த்தியாக அமைகிறது. இது வெற்று பின்புற பெனலைக் கொண்டுள்ளது. அது மிகவும் கடினமானதும் உடைக்க முடியாத வகையிலும் அமைந்துள்ளதுடன், கைரேகைகள் காரணமான அடையாளங்கள் இதில் பதியாது. இக்கையடக்கத் தொலைபேசியின் இரண்டு உயர்ந்த மற்றும் நாகரீகமான வண்ணங்கள், நூற்றுக்கணக்கான வண்ணக் கலவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் இத்தொழில்துறையில் அழகியலில் முன்னணி வகிக்கின்றது.

மிகவும் திறன்மிக்க Portrait கொண்ட, கெமராவின் Bokeh Effect ஆனது, ஒரு அற்புதமான மற்றும் சிறப்புமிக்க portrait உணர்வைக் வழங்குகிறது. பின்புற கெமரா மூலம் மிகவும் தெளிவுமிக்க புகைப்படங்களை எடுக்க முடியும் என்பதோடு, multi-frame மற்றும் anti-vibration  தொழில்நுட்பம் காணப்படுவதன் காரணமாக, அதிர்வுகள் அற்றதும் மிருதுவான போக்குடைய வீடியோ காட்சிகளை வழங்குகிறது. அழகுபடுத்தும் (beautification) செயல்பாட்டுடன், இது உருவப்படங்களை மிகவும் இயல்பானதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும் ஆக்குகிறது.

நவநாகரீக மற்றும் waterdrop-style notch கொண்ட திரை மற்றும் அன்ட்ரொய்ட் பை இயங்குதளம் (Android Pie OS) அடிப்படையிலான ColorOS 6 உடன் இது வருகிறது. வீடியோக்கள் மற்றும் அடிப்படை கேமிங் அனுபவத்திற்கு OPPO A1K சிறப்பானதாகும். சக்திவாய்ந்த மின்கலம் காரணமாக, OPPO A1K ஆனது, வழக்கமான அன்றாட பயன்பாடுகளான Facebook, WhatsApp, YouTube, ZOOM, MS TEAMS, Chrome போன்ற செயற்பாடுகளில் சிறப்பாக செயல்படுகிறது.

OPPO பற்றி
முன்னணி உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான OPPO, 2008 ஆம் ஆண்டில் அதன் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியதிலிருந்து, OPPO அழகியல் திருப்தி மற்றும் புதுமையான தொழில்நுட்பத்தின் சரியான சினெர்ஜியை இடைவிடாமல் தொடர்கிறது. தற்போது, OPPO தனது Find மற்றும் Reno தொடர்கள் மூலம் பரந்த அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை வழங்குகிறது. தொழில்நுட்ப சாதனங்களுக்கு அப்பால், OPPO அதன் பயனர்களுக்கு ColorOS இயங்குதளம், OPPO + போன்ற இணைய சேவைகளையும் வழங்குகிறது. OPPO ஆனது, 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இயங்குகிறது, உலகளவில் 6 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 4 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களைக் கொண்டுள்ளதுடன் லண்டனில் ஒரு சர்வதேச வடிவமைப்பு மையத்தையம் கொண்டுள்ளது. 40,000 ஊழியர்களை கொண்டுள்ள OPPO, உலகளாவிய ரீதியில்  உள்ள அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்காக அர்ப்பணித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டில் இலங்கையில் செல்பி-மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் OPPO அதன் எல்லைகளை விரிவுபடுத்தி வருகிறது. அதன் முதன்மை ‘F’ தொடர் மற்றும் பிரபலமான Reno தொடர் மூலம் அதன் ஏராளமான வடிவமைப்புகள் மூலம் நுகர்வோர் அனைவரையும் அவர்களிடம் உருவாகி வரும் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது. OPPO ஶ்ரீ லங்கா ஆனது அபான்ஸ், சிங்ககிரி, டயலொக், டாராஸ் உள்ளிட்ட ஏனைய அங்கீகரிக்கப்பட்ட OPPO விற்பனையாளர்களுடன் வலுவான கூட்டாண்மையைக் கொண்டுள்ளதுடன், அந்நிறுவனங்கள், OPPO சாதனங்கள் நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களைச் சென்றடைய தரக்குறியீட்டுக்கு வழிவகுக்கின்றன.


Add new comment

Or log in with...