மாடறுப்பதை தடை செய்வது குறித்து பிரதமர் யோசனை

மாடறுப்பதை தடைசெய்வது குறித்து பிரதமர் யோசனை-Cos Slaughter Ban-Suggestion-Mahinda Rajapaksa

இறைச்சிக்காக மாடறுப்புதை தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இறைச்சிக்காக மாடறுப்பது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் ஆளும தரப்பு எம்.பிக்கள் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டதாக ஆளும் தரப்பு எம்.பிகள் பலரும் தெரிவித்தார்கள்.

ஆளும் தரப்பு பாராளுமன்ற குழுக்கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் பாராளுமன்ற குழு அறையில் இன்று நடைபெற்றது.

இது தொடர்பில் தெரிவித்த காதர் மஸ்தான் எம்.பி, இறைச்சிக்காக மாடறுப்பது தொடர்பில் பிரதமர் யோசனை முன்வைத்தாலும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

20ஆவது திருத்தம், 13ஆவது திருத்தம் மற்றும் இறைச்சிக்காக மாடறுப்பதை தடைசெய்தல் என்பன குறித்து பேசப்பட்டதாக இது தொடர்பில் வினவிய போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறிப்பிட்டார்.

(பாராளுமன்றத்திலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்)


Add new comment

Or log in with...