பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

சிறைச்சாலையிலிருந்து பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிரேமலால் ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினராக சற்று முன்னர் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

எதிர்க்கட்சியினரின் அமளி துமளிக்கு மத்தியில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தை விட்டு வெளிநடப்புச் செய்துள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து தெரிவான, பிரேமலால் ஜயசேகரவுக்கு, பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக அனுமதி வழங்க வேண்டும் என்பதோடு, அவரை பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் நேற்று (07) சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இன்று (08) பிரேமலால் ஜயசேகர, பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக சிறைச்சாலை வேனில் அழைத்து வரப்பட்டார்.


Add new comment

Or log in with...