பிரேமலால் ஜயசேகர இன்று பாராளுமன்றுக்கு

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் இன்று (08) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

பாராளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது. இதன்போது பிரேமலால் ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு அவருக்கு சட்ட ரீதியான தடை இல்லை என, மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (07) அறிவித்திருந்தது.

இதன்போது பிரேமலால் ஜயசேகர, பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவதற்கான அனுமதியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.    

பிரேமலால் ஜயசேகர தாக்கல் செய்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. 


Add new comment

Or log in with...