ஒமந்தையில் 2 கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் கைது | தினகரன்

ஒமந்தையில் 2 கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் கைது

ஒமந்தையில் 2 கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் கைது-42-Yr Old Woman Arrested With Kerala Ganja-Omanthai-Vavuniya

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமோட்டை, மூன்று முறிப்பு பகுதியில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒமந்தை விசேட பொலிஸ் குழுவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஒமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஸ் டி சில்வா அவர்களில் வழிகாட்டலில் ஓமந்தை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் அருளானந்தம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஒமந்தை பாலமோட்டை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

ஒமந்தையில் 2 கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் கைது-42-Yr Old Woman Arrested With Kerala Ganja-Omanthai-Vavuniya

மோட்டார் சைக்கிள் ஒன்றின் அடிப்பகுதியில், இரண்டு கிலோ கேரளா கஞ்சாவினை கொண்டு சென்ற பெண்ணை கைது செய்துள்ளதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று (05) ஒமந்தை பொலிஸார் இக்கைதினை மேற்கொண்டுள்ளனர்.

ஒமந்தையில் 2 கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் கைது-42-Yr Old Woman Arrested With Kerala Ganja-Omanthai-Vavuniya

கேரளா கஞ்சாவினை வைத்திருந்த குற்றச்சாட்டில் நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

கைது செய்யப்பட்ட பெண்ணை ஏழு நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(வவுனியா விசேட நிருபர்  - கே. வசந்தரூபன்)


Add new comment

Or log in with...