முதலீட்டை ஊக்குவிக்க பிரதமர் தலைமையில் அமைச்சரவை உப குழு

முதலீட்டை ஊக்குவிக்க பிரதமர் தலைமையில் அமைச்சரவை உப குழு-Cabinet Sub Committee on Investment Promotion

முதலீட்டை ஊக்குவிப்பது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டதற்கு அமைய, குறித்த உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் வறுமையை ஒழித்து, அனைத்து தரப்பினர்களுக்கும் பலன்கள் கிடைக்கக் கூடிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான மாற்று உற்பத்தி பொருளாதாரத்திற்காக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வசதிகளை விரிவுப்படுத்தலுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது.

இதற்காக கொள்கை ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதியின் பங்களிப்புடனும் அமைச்சரவை அங்கத்தவர்களைக் கொண்ட முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான அமைச்சரவை உப குழுவை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை உப குழுவின் பணிகளுக்காக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காகவும் அமைச்சரவை இதன்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை உப குழு அங்கத்தவர்கள்

  • பிரதமர், மஹிந்த ராஜபக்ஷ: நிதி அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்
  • டக்ளஸ் தேவானந்தா: கடற்றொழில் அமைச்சர்
  • காமினி லொக்குகே: போக்குவரத்து அமைச்சர்
  • பந்துல குணவர்தன: வர்த்தக அமைச்சர்
  • டலஸ் அளகப்பெரும: மின்சக்தி அமைச்சர்
  • ஜோன்ஸ்;டன் பெனாண்டோ: பெருந்தெருக்கள் அமைச்சர்
  • விமல் வீரவன்ச: கைத்தொழில் அமைச்சர்
  • மஹிந்த அமரவீர: சுற்றாடல் துறை அமைச்சர்
  • எஸ்.எம். சந்திரசேன: காணி அமைச்சர்
  • வாசுதேவ நாணயக்கார: நீர் வழங்கல் அமைச்சர்
  • உதய பிரபாத் கம்மன்பில: எரிசக்தி அமைச்சர்
  • ரமேஷ் பத்திரண: பெருந்தோட்டத்துறை அமைச்சர்
  • பிரசன்ன ரணதுங்க: சுற்றுலாத்துறை அமைச்சர்
  • ரோஹித்த அபே குணவர்தன: துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர்
  • அலி சப்ரி: நீதி அமைச்சர்

ஒத்துழைப்பை பெறவுள்ள இராஜாங்க அமைச்சர்கள்

  • துமிந்த திஸாநாயக்க: சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
  • ஜயந்த சமரவீர: களஞ்சிய வசதிகள், கொல்களன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள் மற்றும் இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
  • திலும் அமுனுகம: வாகனங்களை ஒழுங்குப்படுத்தல், பேருந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
  • டீ .வீ. சானக: விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
  • நாலக்க கொடஹேவா: நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருட்கள் அகற்றுதல் மற்றும் சமுதாய துப்பரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
  • அஜித் நிவாட் கப்ரால்: நிதி மற்றும் மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி சீர்திருத்தம் இராஜாங்க அமைச்சர்

Add new comment

Or log in with...